இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி!!

இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி!!
X

கர்நாடகா மாநிலம் சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் நாயக் - லட்சுமி பாய் தம்பதியின் மகள் ரக்ஷிதா என்பவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

ரக்ஷிதா கடந்த 18ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காகப் பேருந்தில் ஏறினார். அப்போது ஒட்டுநர் பேருந்தை இயக்கியதால் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரக்ஷிதா மூளைச்சாவு அடைத்தார். இது குறித்து மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
உடனே அவர்கள் தங்களது மகளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதாகக் கூறினர். இதையடுத்து ரக்ஷிதாவின் உடலிலிருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் அகற்றப்பட்டது.

இதயம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுவனுக்குப் பொருத்துவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது.

மற்ற உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுயின் உடல் உறுப்புதானம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

newstm.in

Next Story
Share it