அடுத்த ஷாக்..!! 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பாட்டிஃபை..!!

அடுத்த ஷாக்..!! 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பாட்டிஃபை..!!
X

உலகின் சிறந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்பாட்டிஃபை பல தடைகளைக் கடந்து இறுதியாக இந்தியாவில் கால்பதித்துள்ளது. ஏற்கெனவே ஜியோ-சாவன், ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், கானா, விங்க், கூகுள் ப்ளே மியூசிக் எனப் பல நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் போதிலும் உலகம் முழுவதிலும் 207 மில்லியன் ஆக்ட்டிவ் பயன்பாட்டாளர்கள், 96 மில்லியன் கட்டணம் செலுத்தும் பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் ஸ்பாட்டிஃபை இந்தியாவில் முக்கிய இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பெருநிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் நிலையில், ஆடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை, சுமார் 600 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 % ஆகும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Next Story
Share it