1. Home
  2. வர்த்தகம்

தமிழகத்தின் இந்த 6 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்..!

தமிழகத்தின் இந்த 6 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்..!

தமிழகத்தில் உள்ள 6 நகரங்களில் ட்ரு 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 100 பேரில் 45 பேர் ஜியோ சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் மாநில வணிகத் தலைவர் ஹேமந்த் குமார் குருசுவாமி கூறியுள்ளார்.


சென்னையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டி மனோ தங்கராஜ் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவையின் மூலம் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு, தமிழகத்தில் 20,000க்கும் மேற்பட்ட டவர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதே நேரத்தில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 77,000 கிலோமீட்டருக்கு பொறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 5ஜி சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். சென்னை மட்டுமல்லாமல் கோயம்பத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையின் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 2023 டிசம்பருக்குள் தமிழகத்தில் உள்ள எல்லா ஊர்களையும் இணைக்கும் நோக்கத்தில் இந்த 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like