1. Home
  2. தமிழ்நாடு

மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானைக்கு 500 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் சிலை..!!

மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானைக்கு 500 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் சிலை..!!

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, நடைபயிற்சி சென்ற போது காமாட்சியம்மன் கோவில் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறை அலுவலகம் பின்பு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் யானை இறந்த இடத்தில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதையடுத்து வழக்கறிஞர் ராம் முனுசாமி என்பவர் அந்த இடத்தில் யானை சிலை வைக்க முடிவு எடுத்தார். இதையடுத்து யானை சிலை உருவாக்க சிற்பி குமாரிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது தலைமையில் 10 தொழிலாளிகள் 2 நாளாக வேலை பார்த்து 500 கிலோ எடையுள்ள கொண்ட கருக்காலான யானை சிலையை உருவாக்கினர். 3 அடி உயரத்திற்கு பீடமும், அதன் மீது 2 அடிக்கு யானை லட்சுமி சாய்ந்து இருப்பது போன்று, வடிவமைக்கபட்டது. சுமார் 5 அடி உயரம் உள்ள இந்த யானை சிலை இன்று காமாட்சியம்மன் கோவில் வீதியில் வைக்கப்பட்டது.

இதை ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழிபட்டனர். சிவனாடியார்கள் தேவாரம் பாடினர். சிலை அருகே புதுச்சேரியின் செல்லமகள் என்று பொறிக்கபட்டுள்ளது. இந்த சிலை 11 நாட்கள் அங்கு இருக்கும். அதன்பிறகு நிரந்தரமான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மாற்றப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like