மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! அகோரியாக மாறிய கணவர்.. நிர்வாண பூஜையால் பரபரப்பு!

மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! அகோரியாக மாறிய கணவர்.. நிர்வாண பூஜையால் பரபரப்பு!
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பசிலிகுட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜாதேசிங்கு. இவரது மனைவி பூர்ணிமா (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இப்போது பூர்ணிமா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியை வைத்து மாட்டு கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பூர்ணிமா தூக்கி எறியப்பட்டார். பூர்ணிமாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து பூர்ணிமாவின் உடல் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், உறவினர்கள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்ய முற்பட்டனர்.

அப்போது உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில் அவருடைய கணவர் ராஜதேசிங்கு குழி முழுவதும் உப்பை கொட்டி விட்டு அதில் திடீரென நிர்வாணமாக பூஜை செய்யத் தொடங்கினார். மேலும் தன்மீது உப்பை கொட்டிக் கொண்டும் குழியில் படுத்துக்கொண்டு பூஜை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த ஊர் மக்கள் சொல்லும்போது, சில வருஷங்களுக்கு முன்பு, இந்த ராஜதேசிங்கு சாமியார் போல் மாறினாராம். அப்போது தன்னை ஒரு சிவபக்தர் என்று சொல்லி வந்தாராம். அதனால்தான், மனைவியின் உடலை புதைக்கும்போது, குழியில் இறங்கி தன்னை அகோரி போல நினைத்து பூஜை செய்துள்ளார். இதை பார்த்து பலர் பயந்துவிட்டனர் என்று சொல்கிறார்கள்.

Next Story
Share it