1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைப்பு!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைப்பு!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து, பள்ளிகள் முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

அங்குள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் போதிய இருப்பு இல்லாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைப்பு!

இந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிற எரிப்பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் டீசல் மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like