1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

கோவையில் கடந்த 3 நாட்களில் காந்திபுரம், ஒப்பணகார வீதி உள்ளிட்ட 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், கோவை மாநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களைக் கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநகர போலீசார் 2 ஆயிரம் பேர், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 1,500 பேர், அதிவிரைவுப் படையினர் 400 பேர், கமாண்டோ படையினர் 100 பேர் என மாநகரத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!!



மேலும், கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையத்திற்கு மூன்று ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில், பாதுகாப்பு பணிகளை, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன், மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் மேற்பார்வையிட்டனர்.

இந்நிலையில், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், பார்த்திபன் நியமிக்கப்படுவதாக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like