1. Home
  2. தமிழ்நாடு

ரசாயன தொழிற்சாலையில் தீ – 36 பேர் உயிரிழப்பு!!

ரசாயன தொழிற்சாலையில் தீ – 36 பேர் உயிரிழப்பு!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 36 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேரை காணவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவு படுத்தப்படவில்லை. ஆனால் முறையான அனுமதியில்லாமல் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருப்பு மைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.


ரசாயன தொழிற்சாலையில் தீ – 36 பேர் உயிரிழப்பு!!

சீனாவில் இது போன்ற தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு விதிமுறைகளில் அலட்சியம் காட்டுவதே காரணம் என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆபத்தான ரசாயனப் பொருட்களை கையாளும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்று அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like