வகுப்பு ஆசிரியரின் அலட்சியத்தால் 18 மணி நேரம் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட 7 வயது சிறுமி..!!

வகுப்பு ஆசிரியரின் அலட்சியத்தால் 18 மணி நேரம் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட 7 வயது சிறுமி..!!
X

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னாவூர் தாலுகாவின், தானாரி பட்டியில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7 வயது சிறுமி ஒருவர் படித்து வந்திருக்கிறார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி முடிந்ததும் வகுப்புக்கு உள்ளேயே இருந்திருக்கிறார்.

ஆனால் வகுப்பு ஆசிரியர் அந்த சிறுமி இருப்பதை கவனிக்காமல் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டதாக தெரிகிறது. அடுத்த நாள் காலை நேரத்தில் பள்ளி திறக்கப்பட்டதும் சிறுமி உள்ளே இருப்பது தெரியவந்தது.


இது குறித்து மாணவியின் மாமா கூறுகையில், "பள்ளி முடிந்தும் சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமியின் பாட்டி பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரிடம் சிறுமி குறித்து விசாரித்து இருக்கிறார். ஆனால் அந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் யாரும் இல்லை என கூறியதாக தெரிகிறது. சிறுமியை காணவில்லை என்று நாங்கள் பல்வேறு பகுதிகளில் தேடினோம். ஆனால் புதன்கிழமை காலை 8 மணிக்கு பள்ளி திறக்கப்பட்ட போது அந்த சிறுமி வகுப்பறையில் வைத்து பூட்டப்பட்டது தெரிய வந்தது. இரவு முழுவதும் சிறுமி தனியாகவே வகுப்பறைக்குள் சிக்கி தவித்து இருக்கிறார்" என்றார்.

மேலும் இதுகுறித்து கல்வி அலுவலர் சிங் கூறுகையில், "பள்ளி நேரம் முடிந்தும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அறைகளை ஆய்வு செய்யவில்லை. அவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி தற்போது நலமாக இருக்கிறார்" என்று கூறினார்.

Next Story
Share it