1. Home
  2. தமிழ்நாடு

அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!! ஜஸ்ட் 16 லட்சம் தான்... !!

அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!! ஜஸ்ட் 16 லட்சம் தான்... !!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாலோ ஆல்ட்ரோ என்ற இடத்தில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், ஆப்டிமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நவீன ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார்.

அலுவலக வீட்டு வேலைகளை செய்யும் ஆப்டிமஸ் ரோபோவை 20 ஆயிரம் டாலருக்கு (ரூ.16 லட்சத்துக்கு) விற்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஆதரவும், கிரேன்கள், இயந்திர வழிமுறைகள் அல்லது கேபிள்கள் இல்லாமல் வேலை செய்வது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.

அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!! ஜஸ்ட் 16 லட்சம் தான்... !!

ரோபோவில் ஒரு மணி நேரத்திற்கு 2.3 கிலோவாட் பேட்டரி பேக் உள்ளது. இது ஒரு நாள் முழுவதும் வேலை செய்வதற்கு ஏற்றது. டெஸ்லா சிப்பில் இயங்குகிறது. மேலும் இது வைஃபை மற்றும் எல்டிஇ இணைப்பைக் கொண்டுள்ளது என்று தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.



இந்த ரோபோவால் 9 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை வரை துக்க முடியும் என தகவல் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவின் நடனமாடும் விடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

Trending News

Latest News

You May Like