விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..?பொருளாதார நிபுணர்களுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை!

விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..?பொருளாதார நிபுணர்களுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை!
X

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்திருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. திமுக அளித்த வாக்குறுதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு உதவித்தொகை, பெட்ரோல் விலை குறைப்பு போன்றவை நிறைவேற்றப்பட்டது.1000-schemeஎனினும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஈஏசி குழுவுடன் நேற்று நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.போலிச் செ‌ய்‌திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.


Next Story
Share it