அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!! 10 நிமிட உணவு விநியோக சேவையை நிறுத்திய சோமேட்டோ..!!

அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!! 10 நிமிட உணவு விநியோக சேவையை நிறுத்திய சோமேட்டோ..!!
X

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ,10 நிமிடங்களில் உணவை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு தங்களின் வர்த்தகத்தை புதிய வகையில் மாற்றியமைப்பதோடு, உணவகங்களுடன் புதிய முறையை உருவாக்க உள்ளதே காரணம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

10 நிமிடங்களில் உணவுகளை விநியோகிக்கும் சேவைகளை டெல்லி, குருகிராம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சோமேட்டோ நிறுவனம் சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், ஓராண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் உணவை 10 நிமிடத்தில் டெலிவரி செய்வோம் என்ற திட்டத்தை ஜொமாட்டோ அறிவித்தது.வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், இதனால் சாலை விபத்து, ஊழியர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும் என்று விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டத்தை ஜொமாட்டோ நிறுவனம் கைவிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, இந்த திட்டம் எதிர்பார்த்த லாபத்தை ஜொமாட்டோவுக்கு அளிக்கவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

குறைந்த அளவு ஆர்டர்கள், தாளி மற்றும் காம்போ ரக உணவு பொருட்களை 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நடைமுறை சவால்கள் காரணமாக இந்த திட்டத்தை கைவிடுகிறது ஜொமாட்டோ

Next Story
Share it