1. Home
  2. வர்த்தகம்

நீங்க தங்கம் வாங்க போறீங்களா..!! அப்போ இதை படிச்சிட்டு போங்க..!!

நீங்க தங்கம் வாங்க போறீங்களா..!! அப்போ இதை படிச்சிட்டு போங்க..!!

தங்கம் என்பது 24, 22, 18, 14 கேரட்களாக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையானதாகும். இதனை நாணயம், பிஸ்கட் என அளவில் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியாது. அதனுடன் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்தே ஆபரணம் செய்ய முடியும்.

22 கேரட் தங்க ஆபரணத்தில் தங்கம் கூடுதலாகவும், செம்பு குறைவாகவும் இருக்கும். அதேசமயம் 14 கேரட் ஆபரணங்களில் 22 கேரட்டை விடவும் தங்கம் குறைவாக பயன்படுத்தப்படும். எனவே அதற்கு ஏற்ப அதன் விலைகளில் மாற்றம் இருக்கும்.

பாதுகாப்பாக இருக்க, ஹால்மார்க் தங்க நகைகளை வாங்குவது நல்லது. ஹால்மார்க் சான்றிதழ் பெற்றிருந்தால் அது தூய்மை தங்கமாகும். ஹால்மார்க் நகையில் அந்தக் கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையைச் சேர்ந்ததுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.


நீங்க தங்கம் வாங்க போறீங்களா..!! அப்போ இதை படிச்சிட்டு போங்க..!!



நகையை, முதலீடாக வாங்குபவர்களுக்காக, நகை வியாபாரி ஒருவர் கொடுத்த டிப்ஸ்:

  • அதிக வேலைப்பாடுகள் உடைய நகைகள் வாங்குவது பயன் தராது. செய்கூலி, சேதாரம் என்று புரியாத கணக்கெல்லாம் சொல்வர். வேலைப்பாடு குறைந்த, சாதாரண நகைகள் வாங்குவதே புத்திசாலித்தனம். செய்கூலி, சேதாரம் குறைவு என விளம்பரம் செய்வது, கல் அல்லது அரக்கு வைத்த நகைகளாகத் தான் இருக்கும்.
  • சில ஆண்டுகளுக்கு பின், மறு விற்பனை அல்லது அவசர தேவைக்காக அடகு வைக்கும்போது தான், கல்லின் எடை தெரிந்து அதிர்ச்சி அடைவர். எனவே, கல் நகையை வாங்கும்போதே, எடையை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
  • இதுதவிர, நகையில், 'ஹால்மார்க்' முத்திரை உட்பட மற்ற ஐந்து அம்சங்களும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம்.
  • விற்பனை சீட்டு வாங்கும்போது, அதில், நகைக்கான மதிப்பு, செய்கூலி எவ்வளவு என்பதை கேட்டு தெளிவு பெறுங்கள்.
  • 'ஹால்மார்க்' முத்திரை உட்பட, மேலே சொன்ன அனைத்தும், வெள்ளிக்கும் பொருந்தும்.
  • மாதம் ஒருமுறை அல்லது குறைந்தபட்சம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, நகைகளை எல்லாம் எடுத்து வெள்ளை துணியால் துடைத்து பராமரிக்கவும். அப்படி பராமரிப்பதன் மூலம் கண்ணிகள் விட்டிருந்தாலோ, டாலர் நெகிழ்ந்திருந்தாலோ கவனித்து, சரி செய்து கொள்ளலாம்

Trending News

Latest News

You May Like