1. Home
  2. வர்த்தகம்

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!!


தங்கத்தின் மீதான ஆசையும் மோகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பதனால்தான் தினம் ஒரு நகைகக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்படுகின்றன.பணத்தை சேமிக்க, தங்கம் வாங்குவதை பலரும் ஒரு முக்கிய வழியாக வைத்திருக்கிறார்கள். செலவு போக கையில் பணம் சேர்ந்தால் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது தங்கம்தான். சிறுகசிறுக நகைகளாக சேர்ப்பது அவர்கள் பழக்கம். நாளடைவில் அதுவே கணிசமான சேமிப்பாகி விடுகிறது.எதிர்பாராத மற்றும் பெரிய தேவைகளுக்கு மற்றவரிடம் கைநீட்டுவதை விட, சொந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்கிறார்கள். மிகப்பெரிய தேவைகளுக்கு நகைகளை விற்கவும் தயங்குவதில்லை.

இந்நிலையில் ஏழைகள் தங்கம் என்ற வார்த்தை எழுதி மட்டுமே பார்க்கும் காலம் வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,080-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து, ரூ.5,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உய்ர்ந்து, ரூ.70,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!!



Trending News

Latest News

You May Like