1. Home
  2. விளையாட்டு

கே.எல்.ராகுலுக்கு விரைவில் திருமணம்..!!

கே.எல்.ராகுலுக்கு விரைவில் திருமணம்..!!

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பிரபல நடிகையுமான அதியாவும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி இந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிபடுத்தி உள்ள சுனில் ஷெட்டி, திருமண தேதி மற்றும் இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like