1. Home
  2. விளையாட்டு

பாகிஸ்தானை பதம் பார்த்த இங்கிலாந்து.. வரலாறு படைத்து சாதனை!!

பாகிஸ்தானை பதம் பார்த்த இங்கிலாந்து.. வரலாறு படைத்து சாதனை!!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்து அணி வரலாறு படைத்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி ராவல்பிண்டி நகரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.


பாகிஸ்தானை பதம் பார்த்த இங்கிலாந்து.. வரலாறு படைத்து சாதனை!!



சாக் கிராலி (122), பென் டக்கெட் (107), போப் (108) , ஹேரி ப்ரூக் (101 நாட்-அவுட்) என இங்கிலாந்து அணியின் நான்கு பேட்ஸ்மேன்களுகம் சதம் விளாசினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி பவுலர்களின் அனைத்து விதமான பந்து வீச்சு வித்தைகளும் கைகொடுக்கவில்லை.

முதல் நாளின் மூன்று காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணி முறையே 174, 158 மற்றும் 174 ரன்களை குவித்திருந்தது. அதில் கடைசி கட்டத்தில் 21 ஓவர்களில் இங்கிலாந்து அணி, 174 ரன்களை குவித்தது.இந்த அதிரடி ஆட்டம் மூலம் சுமார் 112 ஆண்டு சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் குவித்ததும் இதுவே முதல் முறையாகும்.


newstm.in

Trending News

Latest News

You May Like