மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் அன்வார் இப்ராஹிம்!!

மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் அன்வார் இப்ராஹிம்!!
X

கடந்த அக்டோபர் 10-ம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மொத்தம் 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.


மலேசியா அரசியல் கட்சிகளில் பக்கத்தான் ஹரப்பான் 80 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை அந்த கூட்டணி பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய தேசிய முன்னணி கூட்டணி வெறும் 35 இடங்களில்தான் வென்றது. மலேசியாவின் முக்கியமான அம்னோ கட்சியும் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. ஆனால் பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் தங்கள் வசம் இருக்கிறது என்கிறார்.

இந்த நிலையில், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.

முன்னதாக, அன்வார் 1998-ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஊழல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தன் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Next Story
Share it