மந்திரவாதியை நம்பி தாயே குழந்தையை நிர்வாண பூஜைக்கு அழைத்து வந்த கொடூரம்..!!

மந்திரவாதியை நம்பி தாயே குழந்தையை நிர்வாண பூஜைக்கு அழைத்து வந்த கொடூரம்..!!
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஓடைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் வில்சன் (36). இவருக்கும் ரோணுகா தேவி என்பவருக்கும் திருமணமாகி 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவரது கணவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அவரது குடும்பத்தில் பணப்பிரச்னைகள் வந்ததாக கூறப்படுகிறது. குறி பார்த்தால், பிரச்னைகள் தீரும் என உறவினர் ஒருவர், ரேணுகா தேவியிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து உறவினர் ஒருவருடன் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் (48) என்பவரிடம் மாந்திரீகம், குறி பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவருக்கும் மாந்தீரிக சாமியார் ராமகிருஷ்ணணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி குறி பார்க்க சென்றுள்ளார்.


தனது கனவருக்கு சரியான வேலை அமையவில்லை எனக் கூறி குறி பார்த்துள்ளார். அப்போது மாந்தீரிகம் செய்த ரச மணி ஒன்றை ரேணுகா தேவியிடம் கொடுத்த ராமகிருஷ்ணன், "இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் நீ கோடீஸ்வரி ஆகிடலாம் , குடும்ப பிரச்சனை தீரும்" எனக் கூறியுள்ளார். தொடர்ந்து முத்து போட்டு பார்த்து, '8 வயது மகளுக்கு அமாவசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும்' என்றும் அவரிடம் கூறியுள்ளார்.

சாமியாரின் பேச்சால் மயங்கி கடந்த மாதம் காரைக்குடி அருகே உள்ள மானகிரி காட்டு பகுதியில் உள்ள மாந்திரீக சாமியார் ஆசிரமத்திற்கு சிறுமியை தாய் அழைத்து வந்துள்ளார். இரவு அம்மாவசை பூஜையில் 8 வயது சிறுமியை நிர்வாணமாக அமர வைத்து போலி சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது . இதற்கு தாய் உடந்தையாக இருந்துள்ளார். சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூற அவர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசம் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் திருப்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி மாந்தீரிக போலி சாமியார் ராமகிருஷ்ணன், மற்றும் உடந்தையாக இருந்த சிறுமி தாய் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Next Story
Share it