பாலியல் புகார் – தனியார் பள்ளி தாளாளர் கைது!!

பாலியல் புகார் – தனியார் பள்ளி தாளாளர் கைது!!
X

+2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34), 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலைந்து சென்றனர்.




மேலும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் வினோத் பூச்சி மருந்து அருந்திய படி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை, மாணவ, மாணவிகளுக்கு அது தெரியும் என்று கூறினார்.




இந்த நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை கோவாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை சென்னைக்கு கொண்டு வந்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it