மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த பீட்டா... ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ..!!

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த பீட்டா... ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ..!!
X

பாரம்பரிய விளையாட்டாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசு காளைகளை விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்தப்பட்ட கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவால் 2017-ல் ஜல்லிக்கட்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் சிலரால் போராட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடந்தன. மக்களின் இந்த கிளர்ச்சியால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தர மக்கள் புரட்சி வென்று தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக பல்வேறு தமிழின விரோத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வழக்குகள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று (நவ. 24) காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நலவாரியம் மற்றும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு நீதிபதி கேஎம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது.



அப்போது ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என தமிழ்நாடு கருத முடியுமா? தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கலாசார விதிகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறதா?, நாட்டு மாடு இனங்கள் இன வளர்ச்சிக்கு ஜல்லிக்கட்டு உதவுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீட்டா அமைப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். மேலும் விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் எனவும் லூத்ரா கூறினார்.

இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை இயற்றிய சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story
Share it