அதிர்ச்சி! மதுபாட்டிலுடன் வகுப்புக்கு வந்த மாணவர்கள்!!

அதிர்ச்சி! மதுபாட்டிலுடன் வகுப்புக்கு வந்த மாணவர்கள்!!
X

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 19ஆம் தேதி 11ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் மது போதையிலும் , மதுபாட்டிலுடனும் வகுப்பறைக்கு வந்துள்ளனர்.

இதைப்பார்த்து மற்ற மாணவ, மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனால் தலைமை ஆசிரியர் சுரேஷ் , மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனார்.இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் இந்த சம்பவம் குறித்து விசாரித்தார் . பின்னர் 5 மாணவர்களையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இச்சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it