கமல்ஹாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!

கமல்ஹாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!
X

உடல் நலக்குறைவு காரணமாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் கமல் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், உடல் சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல் ஹாசன் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும், சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெவ்ஸ்டம்.in

Next Story
Share it