இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு..!!

இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு..!!
X

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பயணாளிகளுக்கு மறு குடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயணாளிகளுக்கான தொகையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியின்படி திருவல்லிக்கேணியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்று தெரிவித்த அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையானதை தமிழக முதலமைச்சர்ர் பார்த்துப் பார்த்து செய்து வருவதாகவும், முதலமைச்சரின் வழியில் மக்களுக்காக உழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story
Share it