ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய இளைஞரிடம் விசாரணை!!

ஆன்லைனில் வெடிமருந்து வாங்கிய இளைஞரிடம் விசாரணை!!
X

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் பழக்கடையில் வேலை செய்து வரும் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி பிளிப்கார்ட் மூலம் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி வளாகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, தனது எதிரி மகாராஜன் என்பவர் மீது குண்டு வீசி கொலை செய்வதற்கு வாங்கியதாக மாரியப்பன் தெரிவித்தார்.இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமையினர் மாரியப்பனை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு விசாரணையை முடித்துக் கொண்டனர். அதன்பிறகு, மாரியப்பனிடம் சரவணம்பட்டி போலீசார் மேல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், அதன் அடிப்படையில் மாரியப்பன் கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it