1. Home
  2. விளையாட்டு

இன்று ஒருநாள் சவுதி முழுவதும் விடுமுறை.. எதற்கு தெரியுமா ?

இன்று ஒருநாள் சவுதி முழுவதும் விடுமுறை.. எதற்கு தெரியுமா ?

கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. . இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் பெனால்டி பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்..கடைசி வரை போராடியும் அர்ஜென்டினா அணியால் ஆட்டத்தை டிரா செய்ய முடியாமல் போனது. முடிவில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் இரு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியது.


இன்று ஒருநாள் சவுதி முழுவதும் விடுமுறை.. எதற்கு தெரியுமா ?

இதன் மூலம் தொடர்ச்சியாக 36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றி வேட்டைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் தென் அமெரிக்கநாட்டுக்கு எதிராகவும், அர்ஜென்டினாவுக்கு எதிராகவும் சவுதி அரேபியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like