1. Home
  2. தமிழ்நாடு

இன்று கார்த்திகை அமாவாசை... நீங்கள் செய்ய வேண்டிய விரதம்.. கிடைக்கும் பலன்கள்!!

இன்று கார்த்திகை அமாவாசை... நீங்கள் செய்ய வேண்டிய விரதம்.. கிடைக்கும் பலன்கள்!!

கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். மேலும் குலதெய்வ வழிபாடு செய்தால் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும்.

இன்று கார்த்திகை அமாவாசை... நீங்கள் செய்ய வேண்டிய விரதம்.. கிடைக்கும் பலன்கள்!!

இந்த மாதத்தில் இன்று காலை 6.35 மணிக்கு துவங்கும் அமாவாசை திதியில் இந்த விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு நோய் நொடிகள் அண்டாது. தீராத பிணிகள் தீர கார்த்திகை அமாவாசையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

அதிகாலையிலேயே குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரேமற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.

பெற்றோர் இல்லாத நபர் தன்னுடைய பெற்றோரை நினைத்தும், முன்னோர்களை நினைத்தும் விரதமிருந்து அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் அவசியம். தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய பித்ருதோஷம் நீங்கும். அவர்களை நினைத்து அன்னதானம் உள்ளிட்ட தானங்கள் செய்வதும், முன்னோர்கள் பெயரில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

இன்று கார்த்திகை அமாவாசை... நீங்கள் செய்ய வேண்டிய விரதம்.. கிடைக்கும் பலன்கள்!!

கார்த்திகை மாதம் சிவ பெருமானுக்கு மிகவும் விசேஷமான மாதமாக பார்க்கப்படுகிறது. கார்த்திகை அமாவாசை நாளில் நாம் சிவ ஆலய வழிபாடு செல்வதும், சிவ வழிபாடு செய்து, சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதும் நல்லது.

அன்றைய தினத்தில் ஏழை, எளியோருக்கு கம்பளி ஆடைகளை தானமாக வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், சனி தோஷத்தில் இருந்து நாம் விடுபடலாம். எதிர்காலத்தில் நன்மைகள் உருவாகத் தொடங்கும்.

கார்த்திகை அமாவாசையான இன்று காலையிலோ அல்லது மாலையிலோ அன்னதானம் செய்வது நல்லது. பசு மாடுகளுக்கு பழம் அல்லது உணவு அளிப்பது நல்லது. அத்துடன் நம் முன்னோர்களுக்கு அமாவாசையன்று தர்ப்பணம் செய்வதும் சிறப்பு.

அப்படி செய்வதினால் முன்னோர்கள் நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மேலும் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சுக சம்பத்துக்கள் ஆகியவை சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேலை தேடுபவர்கள் அமாவாசை தினத்தில் ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடவும். அதை இரவில் எடுத்து அந்த நபரின் தலை முதல் கால் வரை ஏழு முறை தொட்டு எடுத்து அதை நான்கு சம பங்காக வெட்டவும். அதனை ஊர் அடங்கியதும் உங்கள் தெருவின் நான்கு திசைகளிலும் ஒவ்வொரு துண்டாக எறியவும். இதனை செய்யும்போது யாரும் பார்க்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், வேலை வாய்ப்புகள் உருவாகத் தொடங்கும், திருஷ்டி நீங்கி நன்மை உண்டாகும்.

இன்று கார்த்திகை அமாவாசை... நீங்கள் செய்ய வேண்டிய விரதம்.. கிடைக்கும் பலன்கள்!!

அமாவாசை அன்று மாலையில் வீட்டின் வடகிழக்கு மூலையில் பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். விளக்கின் திரி சிவப்பு நிற நூலாக இருப்பது நல்லது.

விளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைக்கவும். அதோடு சக்கரை கலந்த மாவு எறும்புகளுக்கு கொடுக்கவும்..இவ்வாறு செய்வதால் லட்சுமி கடாட்சம் அடைவதோடு, பாவங்களும் அழியும்.

Trending News

Latest News

You May Like