1. Home
  2. விளையாட்டு

தேசிய கீதத்தை பாட மறுத்த கால்பந்து வீரர்கள்! ஏன் தெரியுமா?

தேசிய கீதத்தை பாட மறுத்த கால்பந்து வீரர்கள்! ஏன் தெரியுமா?

ஈரானில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம்சாட்டி சிறப்பு பிரிவு படையினரால் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். முக்கிய நகரங்களில் பெண்கள் வெளிப்படையாகவே ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடிகளை அறுத்து எறிந்தனர்.




இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாக தாக்கும் ஈரான் அரசுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் அங்கு அரச அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாடு தழுவிய அளவில் அங்கு போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த நிலையில், கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் போராட்டத்துக்கு ஆதரவாக ஈரான் அணி வீரர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய கீதத்தை பாட மறுத்த கால்பந்து வீரர்கள்! ஏன் தெரியுமா?


கால்பந்து உலககோப்பைக்கு ஈரான் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கும் முன்னர் இரு நாடுகளின் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.

அப்போது தங்கள் நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடாமல் ஈரான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like