மக்களே எச்சரிக்கை பதிவு..!! இந்த ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து..!!

மக்களே எச்சரிக்கை பதிவு..!! இந்த ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து..!!
X

யூனிலிவர் நிறுவனம் தனது சில தயாரிப்புகளை தற்போது திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இந்நிறுவன ஷாம்பு தயாரிப்புகளில், குறிப்பாக டவ் ஷாம்புக்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாக யூனிலிவர் நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட யூனிலிவர் நிறுவன உலர்ரக ஷாம்புக்களை திரும்பப் பெற்று வருகிறது. பென்சீன் அளவை காரணம் காட்டி ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்படுவது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் P&G தயாரிப்பான Pantene மற்றும் Herbal Essences ஷாம்புக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஷாம்பு பயன்படுத்துவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it