மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவில்லை : அண்ணாமலை சர்ச்சை பேச்சு!!

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவில்லை : அண்ணாமலை சர்ச்சை பேச்சு!!
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை, மிசா சட்டத்தில் கைதானதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். மதுரை மற்றும் காரைக்குடியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். காரைக்குடியில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் அவர், கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

இதனையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜகவினர் மீது தமிழ்நாடு அரசு பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவினர் சிறை செல்ல அஞ்சுபவர்கள் இல்லை எனவும் திமுகவினர் தான் சிறை செல்ல அஞ்சுவார்கள் எனவும் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறை செல்லவில்லை, மிசா சட்டத்தில் சிறை சென்றது போல் பொய் சொல்லி வருகிறார் என விமர்சித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, இதே போல் முதலமைச்சர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்ற சர்ச்சை எழுப்பட்ட நிலையில் அந்த சர்ச்சையை அண்ணாமலை மீண்டும் எழுப்பியுள்ளார்.

newstm.in

Next Story
Share it