தனது இறப்பு சான்றிதழை கண்டுபிடிக்கக்கோரி விநோத விளம்பரம்!!

தனது இறப்பு சான்றிதழை கண்டுபிடிக்கக்கோரி விநோத விளம்பரம்!!
X

தற்போது இணையத்தில் ஒரு விளம்பரம் வைரலாகி வருகிறது. அந்த விளம்பரத்தை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த விளம்பரத்தில் தனது இறப்பு சான்றிதழைத் தவறுதலாகத் தொலைத்து விட்டதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விளம்பரத்தில் இறப்பு சான்றிதழ் தொலைந்த இடமும், தேசியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் விளம்பரத்தில் அச்சிடப்பட்ட பெயரில் ரஞ்சித் குமார் சக்கரவர்த்தி என்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, விளம்பரத்தைக் கொடுத்த நபரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சான்றிதழ் கிடைத்தால் எங்கு அனுப்ப வேண்டும், சொர்க்கத்திற்கா அல்லது நரகத்திற்கா என்று கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.


மற்றொருவர் "நான் ஆவிகளை நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இப்படி பலர் கிண்டல் அடித்துப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படி தவறாக விளம்பரம் வெளியிட்ட செய்தித்தாள் நிறுவனத்தையும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் இந்த விளம்பரம் எந்த செய்தி தாளில் வெளியானது, எந்த தேதியில் வெளியானது என்ற தகவல் தெரியவில்லை.

newstm.in

Next Story
Share it