கூலிப்படை ஏவி பெண் காவலரை கொன்ற மற்றொரு பெண் காவலர்!!

கூலிப்படை ஏவி பெண் காவலரை கொன்ற மற்றொரு பெண் காவலர்!!
X

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையால் ஒரு பெண் காவலரை, மற்றொரு பெண் காவலர் கூலிப்படை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்த சுதா (37) என்பவர் ஹிலியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

சுதா பணிபுரியும் அதே காவல் நிலையத்தில் ராணி (30) என்பவரும் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராணிக்கு சுதாவுக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இருவரும் வேறொரு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த ராணி, சுதாவை கொலை செய்ய மஞ்சுநாத் என்பவருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் பலமுறை முயற்சித்தும் சுதாவை மஞ்சுநாத்தால் கொல்ல முடியவில்லை. இதனால் ராணி அவரை சரமாரியாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாத், சுதாவை கொலை தீவிரம் காட்டினார்.

சம்பவத்தன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுதாவிற்கு, நிகில் என்பவர் காரில் வந்து லிப்ட் கொடுத்துள்ளார். சிறிது தூரத்தில் மஞ்சுநாத் அதே காரில் ஏறி சுதா நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை பேருந்து நிலையம் அருகே உள்ள புதருக்குள் தூக்கி சென்றுவிட்டு தப்பிச் சென்றார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மஞ்சுநாத் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து மஞ்சுநாத்தை விசாரிக்க முயன்ற போது, அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். சுதா கொலை தொடர்பாக நிகில், ராணியை கைது செய்த போலீஸார், மஞ்சுநாத் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it