ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள்!!

ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள்!!
X

கேரளாவில் இஸ்லாமிய அமைப்பினர் பேருந்துகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதால் ஹெல்மெட் அணிந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கினர்.

நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் சோதனை நடைபெற்றது.

தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். கேரளாவில்மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனால் காலை முதல் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கின. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பந்த்தை மீறி கேரளாவில் இயக்கப்பட்ட பேருந்துகளின் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சு தாக்குதலுக்கு பயந்து கேரள போக்குவரத்து துறை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை இயக்கினர்.

newstm.in

Next Story
Share it