குடும்பத்துடன் சேர்ந்து மனைவியை கொன்ற கொடூர கணவன்!!

குடும்பத்துடன் சேர்ந்து மனைவியை கொன்ற கொடூர கணவன்!!
X

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை அருகே கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலை இல்லாமல் கிடந்த உடலை கைப்பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் தகவல் ஏதும் இல்லை. ஒரு வருடம் கடந்த பின்னரும் இந்த விவகாரத்தில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் சானியா என்ற பெண்ணைக் காணவில்லை என்று கூறி உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு முன்னர் கிடைத்த சடலத்தின் புகைப்படத்தை வைத்து உறவினர்களிடம் கேள்வி எழுப்பியபோது அந்த பெண் அவரை போல இருப்பதாக கூறியுள்ளனர்.விசாரணையில், சானியாவின் கணவர் ஆசிப், பழைய வீட்டை விற்றுவிட்டு மும்ப்ரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகவும். சானியா யாருடனோ ஓடிப்போய்விட்டதாகவும், ஓராண்டாகக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

டிஎன்ஏ சோதனையில் அந்த பெண் சானியா என தெரியவந்தது. இதனால் போலீஸாருக்கு சானியாவின் கணவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது உண்மைகள் வெளிவந்தது.
விசாரணையில், கணவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்கள் மகளை ஆசிப் தன்னுடைய குழந்தை இல்லாத சகோதரியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு சானியா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் சானியாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கை கால்களை கட்டி தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டு கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it