1. Home
  2. விளையாட்டு

மோசமாக பிட்ச் தயார் செய்தவரை நிரந்தரமாக வேலையை விட்டு அனுப்பிய பிசிசிஐ..!!

மோசமாக பிட்ச் தயார் செய்தவரை நிரந்தரமாக வேலையை விட்டு அனுப்பிய பிசிசிஐ..!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. பந்துவீச்சிற்கு சாதகமான மைதானமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இரண்டு அணிகளும் சேர்த்து மொத்தம் 39.5 ஓவர்கள் பிடித்தது. அதில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. மேலும் இரண்டு அணி வீரர்களும் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு மிகவும் திணறினர். அதிக ஸ்பின் ஓவர்கள் வீசப்பட்டதும் இப்போட்டியில் தான்.இதனால் இந்த மைதானம் மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்டது. ஆகையால் போட்டி முடிந்த பிறகு மைதானம் குறித்து பல்வேறு கேள்விகளை இந்திய பந்துவீச்சு பயிற்சியாளரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் கொடுத்த அவர்,“மைதானம் எதற்காக இப்படி தயார் செய்யப்பட்டது என்பதை நீங்கள் பிட்ச் மேற்பார்வையாளர் மற்றும் பராமரிப்பாளரிடம் கேட்க வேண்டும். அவர்கள்தான் இதற்கு பொறுப்பு. நாங்கள் 120-130 ரன்கள் எளிதாக அடிக்க முடியும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பந்துவீச்சிற்கு சாதகமான பிட்ச் என்று எதிர்பார்க்கவில்லை. சற்று ஏமாற்றமாகவும் இருந்தது. இறுதியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி கொடுக்கிறது.” என்றார்.

இதற்கிடையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின்போது பிட்ச் பராமரிப்பாளராக இருந்த சுரேஷ்குமார் என்பவர் வேலையை விட்டு அனுப்பப்பட்டு இருக்கிறார். புதிய மேற்பார்வையாளராக சஞ்சீவ் அகர்வால் என்பவர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like