1. Home
  2. தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் வர உள்ள அதிரடி மாற்றம்!!

இன்ஸ்டாகிராமில் வர உள்ள அதிரடி மாற்றம்!!

இளசுகளின் மனதில் இடம் பிடித்துள்ள மிக முக்கியமான செயலி இன்ஸ்டாகிராம். இந்த செயலிக்கு ஏராளமான ஃபாளோவர்ஸ் உள்ளனர்.

புகைப்படங்கள் பகிர்வதற்கான பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் தற்போது சாட், வீடியோ பகிர்வு, லைவ் ஸ்ட்ரீம் என்று எல்லா வசதிகளுடன் இயங்கி வருகிறது.

அதிலும் முக்கியமாக டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய இடம் பிடித்தது. அதில் இருந்து இளசுகளின் விரும்பும் செயலியாக இன்ஸ்டா மாறியது.


இன்ஸ்டாகிராமில் வர உள்ள அதிரடி மாற்றம்!!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்கள் தொடர்பான மேம்பாட்டு பணிகள், எடிட் ஆப்ஷன்கள், ஃபில்டர்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தியது. வீடியோ உள்ளடக்கங்கள் அதிகம் பகிரப்பட்டது.

எனவே இந்த ஆண்டில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் - வீடியோ உள்ளடக்கத்திற்கான சமநிலை காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like