இல்லத்தரசிகள் அதரிச்சி!! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!!

இல்லத்தரசிகள் அதரிச்சி!! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!!
X

ஆண்டாண்டு காலமாக தங்கம்தான் பெரும்பாலானோரின் முதலீடாக இருந்துவருகிறது. இதற்குக் காரணம் அழகு, அந்தஸ்து மற்றும் திருமணம் ஆகிய மூன்றையும் சொல்லலாம். அதுபோக, எப்போது வேண்டுமானாலும் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து நமக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியும் என்பதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் உயர்ந்து, ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,376-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் குறைந்து, ரூ.4,407-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
Share it