மதுரையில் அதிர்ச்சி.. காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமி கூட்டு பலாத்காரம்..!

மதுரையில் அதிர்ச்சி.. காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமி கூட்டு பலாத்காரம்..!
X

மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதே போல பலமுறை அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கார்த்திக்கின் நண்பர்களான ஆதி, ஹரீஷ் ஆகியோருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுமியிடம், ‘இந்த விஷயத்தை ஊர் முழுவதும் சொல்லி விடுவோம்’ என மிரட்டி அவர்கள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திக், ஆதி, ஹரீஷ் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it