கெஜ்ரிவாலால் முடியும்போது என்னால் முடியாதா..?; சீமான் பரபரப்பு கேள்வி..!

கெஜ்ரிவாலால் முடியும்போது என்னால் முடியாதா..?; சீமான் பரபரப்பு கேள்வி..!
X

நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். அரவிந்த் கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா?. 2024 மக்களவைத் தேர்தலில் என்னோட ஆட்டத்தைப் பாருங்கள் என சீமான் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன.


இந்நிலையில், புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 சதவீதம் ஆதிகுடி மக்கள் சிறுபான்மையினர் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். அரவிந்த் கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா?. 2024 மக்களவைத் தேர்தலில் என்னோட ஆட்டத்தைப் பாருங்கள்” என்றார்.

Next Story
Share it