மதுப்பிரியர்களே, டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!

மதுப்பிரியர்களே, டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!
X

குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக் கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. அவற்றுக்கு குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


அதன்படி, நாளை (ஜன. 26-ம் தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நாளை மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகின்றன. நாளை விடுமுறை என்பதால், இன்று மதுக் கடைகளில் வழக்கத்தை விட அதிகளவில் மதுபானம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it