பரபரப்பு.. பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நுழைந்த துணை தாசில்தார் கைது..!

பரபரப்பு.. பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நுழைந்த துணை தாசில்தார் கைது..!
X

பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நள்ளிரவில் புகுந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்ததை அறிந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, இதுகுறித்து பாதுகாவலருக்கு தகவல் அளித்துள்ளார்.


உடனடியாக வீட்டில் சோதனை செய்யப்பட்டபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வரும் ஆனந்த் என்பது தெரியவந்தது. ஆனந்தையும், அவரை அழைத்து வந்த அவரது நண்பரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பதவி உயர்வு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியிடம் பேசுவதற்காக வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவித்தனர். நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story
Share it