இன்று தை அமாவாசை : தர்ப்பணம் கொடுக்கும் நேரம் இது தான்..!!

இன்று தை அமாவாசை : தர்ப்பணம் கொடுக்கும் நேரம் இது தான்..!!
X

முன்னோர்களை வழிபட உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்றாலும், வருடத்தின் 3 அமாவாசைகள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஆடி அமாவாசை, முன்னோர்களை நம் வீட்டிற்கு அழைக்கும் நாள் என்றும், தை அமாவாசையில் முன்னோர்களின் மனங்களை குளிர வைத்து, பித்ருலோகத்திற்கு அனுப்பி வைக்கும் நாள் என்றும் சொல்லப்படுகிறது.

பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றாத ஒருவன் செய்யும் எந்த ஒரு பூஜையையும் நான் ஏற்பதில்லை என மகா விஷ்ணு சொல்வதாக விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது.

எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்?

2023 ம் ஆண்டு தை அமாவாசையானது ஜனவரி 21 ம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 04.25 மணி துவங்கி, ஜனவரி 22 ம் தேதி அதிகாலை 03.20 மணி வரை அமாவாசை திதியானது நீடிக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமும், பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரையில் எமகண்டமும் உள்ளது. ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.


Next Story
Share it