பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - தடம் புரண்ட விரைவு ரயில்!...

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - தடம் புரண்ட விரைவு ரயில்!...
X

பாகிஸ்தானில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் ரயில் தரம் புரண்டு விபத்துக்குள்ளானது.


பாகிஸ்தானின் குவாட்டா நகரில் இருந்து பெஷாவர் நோக்கி ஜாபர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. ரயில் பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டத்தில் வந்தபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இதில், வேகமாக வந்த ரயில் தடம்புரண்டது. விபத்தில் 6-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மேலும், ரயில் பயணிகள் 8 பேர் படுகாயமடைந்தனர்.


இந்த குண்டுவெடிப்பு, விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


newstm.in

Next Story
Share it