டிராகனாக மாற மூக்கு, காதை நீக்கிய திருநங்கை!!

டிராகனாக மாற மூக்கு, காதை நீக்கிய திருநங்கை!!
X

அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் டிராகனாக மாறுவதற்கு மூக்கு மற்றும் காதுகளை நீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் ஹெர்னாட்னஸ். திருநங்கையான இவர் தனது பெயரை டைமெட் இவா மெடுசா என மாற்றிக்கொண்டார். இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், டைமெட் இவா தனது உடல் முழுவதும் 'டாட்டூ' பச்சைக்குத்திக்கொண்டுள்ளார். மேலும், 'டிராகன்' போல் காட்சியளிக்க வேண்டுமென எண்ணிய டைமெட் இவா தனது மூக்கு, காதுகளை நீக்கியுள்ளார். மேலும், தனது நாக்கை பாம்புக்கு உள்ளதுபோல் போல் இரண்டாக வெட்டியுள்ளார்.

மூக்கு, காதுகளை நீக்கி, நாக்கை இரண்டாக வெட்டி 'டிராகன்' போல் காட்சியளிக்கும் திருநங்கை டைமெட் இவா பாம்பு மீது கொண்ட கனவுகளால் தன் பயணம் தொடங்கியதாக கூறினார். இவர் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது


newstm.in

Next Story
Share it