கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் ராகுல் டிராவிட்டின் மகன்!!

கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் ராகுல் டிராவிட்டின் மகன்!!
X

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், தற்போது பயிற்சியாளர் பணியையும் திறம்பட செய்து வருகிறார்.

அவரை போலவே அவரது மகன்களும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இவரது மகன்களான, சமித், அன்வே ஆகிய இருவருமே இளம் கிரிக்கெட் வீரர்கள்.

மூத்த மகனான சமித் கர்நாடக U-14 அணிக்கு ஏற்கனவே விளையாடியுள்ளார். அந்த வரிசையில் இளைய மகன் அன்வே டிராவிட் தற்போது கர்நாடகா U-14 அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி விளையாடப் போகிறார்.ராகுல் டிராவிட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருந்து பின்னர் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். தந்தை ராகுல் டிராவிட்டை போலவே மகன் அன்வேவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கர்நாடக அணிக்காக அன்வே டிராவிட் பங்கேற்கும் போட்டிகள் ஜனவரி 23 மற்றும் பிப்ரவரி 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மூத்த மகன் சமித் டிராவிட் அவர் விளையாடிய U-14 போட்டியில் இரட்டை சதமடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இளைய மகன் அன்வேவும் அதேபோல் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

newstm.in

Next Story
Share it