1. Home
  2. விளையாட்டு

சக வீரரின் காதலியுடன் உல்லாசம்....கேப்டனின் வீடியோவால் சர்ச்சை!.....


அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், தற்போது பாலியல் குற்றச்சாட்டில் மீண்டும் இடம்பிடித்து உள்ளார்.

பாகிஸ்தான் அணி, தனது சொந்த மண்ணில் அடுத்தடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களை இழந்ததால், சில வீரர்களை அணியில் இருந்து நீக்கவேண்டும் என பலர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாமை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன.

இந்த நிலையில் பாபர் அசாம் தனது சக வீரரின் காதலியுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபர் அசாமின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் ஒரு பெணுடன் பேசும் அந்தரங்க பேச்சுக்கள் ஆன்லைனில் வெளிவந்ததை அடுத்து புதிய சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.


சக வீரரின் காதலியுடன் உல்லாசம்....கேப்டனின் வீடியோவால் சர்ச்சை!.....



வீடியோவில்," நீ என்னுடன் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தால், உனது காதலனை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன்'' என பாபர் அசாம் உறுதியளிக்கிறார். நான் பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவரின் காதலி, என்னை அணுகிய பாபர் அசாம் உனது காதலர் அணியில் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து இதே போல் என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார் என்று கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் பாபர் அசாம் பேசும் வீடியோவையும் அதில் இணைத்துள்ளார்.


இந்நிலையில், அந்த வீடியோவில் தோன்றுவது பாபர் அசாம் இல்லை. வேறு ஒருவரின் வீடியோவை போலியாக உருவாக்கி பிரச்னையை கிளப்பியுள்ளனர் என பாபர் அசாமுக்கு ஆதரவாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் பாபரை ஆதரித்துள்ளனர், பாகிஸ்தான் ரசிகர்கள் #StayStrongBabarAzam மற்றும் #BehindYouSkipper போன்ற ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்தியுள்ளனர்.





பாபர் அசாம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், அசாம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து கர்ப்பமாக்கியதாக ஒரு பெண் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like