1. Home
  2. தமிழ்நாடு

இன்று மாட்டு பொங்கல் - பொங்கல் வைக்க வேண்டிய நல்ல நேரம் எப்போ தெரியுமா?

இன்று மாட்டு பொங்கல் - பொங்கல் வைக்க வேண்டிய நல்ல நேரம் எப்போ தெரியுமா?

உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன்படி, விவசாயத்துக்கு உறுதுணைக விவசாயிகளின் குடும்பத்தின் கால்நடைகளுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக, முன்னதாகவே, விவசாயிகள் தங்கள் உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துவிடுவார்கள். இன்று அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் உள்ள பசுக்கள், காளைகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. பிறகு சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்திய பிறகு, வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

பூஜைகள் முடித்தபிறகு, வண்ணம் பூசிய கொம்புகளுக்கு மணியை கட்டிவிட்டு ஊர்வலமாக அதை கொண்டு செல்லவும் உள்ளனர். மேலும் இன்று காலையிலேயே சிவாலயங்களுக்குச் சென்று நந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவு மாலை, பண மாலை, பூ மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, பழ மாலை என எல்லா விதமான மாலைகளையும் சூட்டி நந்தியை அலங்கரித்த நிலையில், மக்கள் திரண்டு வந்து தரிசித்து வருகின்றனர்.

மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்வு பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளது. இதைதவிர, ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் இன்று கோலாகலமாக நடத்தப்படுகின்றன.



இன்று மாட்டு பொங்கல் - பொங்கல் வைக்க வேண்டிய நல்ல நேரம் எப்போ தெரியுமா?

மாட்டு பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம்

2023-ம் ஆண்டு மாட்டுப் பொங்கலானது ஜனவரி 16-ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். முடியாதவர்கள் மாலையில் 4.30 மணி முதல் 5.30 வரை பொங்கல் வைக்கலாம்.



Trending News

Latest News

You May Like