1. Home
  2. தமிழ்நாடு

பழனி கும்பாபிஷேகம்...காணிக்கை செலுத்தும் வழிமுறை என்ன?..

பழனி கும்பாபிஷேகம்...காணிக்கை செலுத்தும் வழிமுறை என்ன?..

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் காணிக்கை செலுத்துவதற்கான வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பழனி கும்பாபிஷேகம்...காணிக்கை செலுத்தும் வழிமுறை என்ன?..


கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம். 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் அவை நடைபெறும்.


அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும்.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும். இதற்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம்.


பழனி கும்பாபிஷேகம்...காணிக்கை செலுத்தும் வழிமுறை என்ன?..



கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8 எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


பழனி கும்பாபிஷேகம்...காணிக்கை செலுத்தும் வழிமுறை என்ன?..



மேலும், மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும். அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.


புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.


newstm.in

Trending News

Latest News

You May Like