கேட்டாலே துள்ளிக்குதிப்பீங்க… சூப்பர் அறிவிப்பு!

 | 

தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தென் மாவட்டங்களில் தொழில் நுட்ப பூங்காங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள டைடல் பார்க்கில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல கட்டட பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மாவட்டத்தில் இரண்டாவது எல்காட் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Tech_Park

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் நுட்ப பூங்காவை அமைத்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம் என்றும், இந்த துறையின் மூலமாக இளைஞருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறினார்.

குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக குறைவாக தொழில் வாய்ப்பு உள்ளது. இதனால் இளைஞர்கள் சென்னை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்கின்றனர். அதனைத் தடுக்க தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP