1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு!

1

காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ- சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி (நேற்று) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்து. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யு கோரிக்கை வைத்தனர்.

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பா, தாளடி பயிர்களுக்கான காப்பீடு காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தமிழக வேளாண் ஆணையம் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.அதனை பரிசீலனை செய்த மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like