விரைவில் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்..!!
பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியானது. இதையடுத்து அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு சேர்க்கை விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 164 கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலைப்பட்ட படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.
இதில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தொடங்கியது. தனியார் கல்லூரிகளைவிட அரசு கல்லூரிகளில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் பலர் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு அரசுக்கல்லூரிகளில் புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாலும் மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆன்லைன் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இதையடுத்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 தினங்களுக்குள் சேர்க்கை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நாளான 25-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து அந்தந்த கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நடைபெற உள்ளது.
.png)